ப்ரீ புக்கிங்கில் புதிய சாதனை படைத்த ஜெயிலர்.. ரஜினியின் அலப்பறை ஆரம்பம்
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.

ப்ரீ புக்கிங் சாதனை
இந்நிலையில், இதுவரை உலகளவில் நடந்த ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் புதிய வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, இதுவரை புக் மை ஷோ தளத்தில் மட்டுமே 1 மில்லியன் டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ளது என தெரியவந்துள்ளது.

கண்டிப்பாக ரஜினிகாந்தின் மாஸ் கம் பேக் ஆக ஜெயிலர் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நாளை ஜெயிலர் என்ன செய்ய போகிறார் என்று.
ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை! போனில் இப்படி கேட்பார்களா
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri