தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா ஜெயிலர்.. செம மாஸ்..
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ஜெயிலர் படம் ஒவ்வொரு நாளும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது.
மேலும் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியுள்ளது என கூறப்படுகிறது. உலகளவில் ரூ. 600 கோடியை நெருங்கும் ஜெயிலர் வசூல் தமிழகத்தில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வசூல்
அதன்படி, தமிழகத்தில் இதுவரை ரூ. 195 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 200 கோடியை கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்த நடித்த முன்னணி நடிகர், ஆனால் காட்சிகளை வெட்டி தூக்கிய இயக்குனர்