தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்த நடித்த முன்னணி நடிகர், ஆனால் காட்சிகளை வெட்டி தூக்கிய இயக்குனர்
தெறி
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் தெறி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, மகேந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் விஜய் - அட்லீ கூட்டணி மெர்சல், பிகில் என பல வெற்றிப்படங்களை கொடுத்தனர்.

தெறி திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் நடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த அனைத்து காட்சிகளும் படத்திலிருந்து எடிட்டிங்கில் வெட்டி தூக்கப்பட்டுள்ளது.
அவர் யார் தெரியுமா
அவர் வேறு யாருமில்லை நடிகர் யோகி பாபு தான். ஆம், யோகி பாபு தான் தெறி படத்தில் நடித்துள்ளார். ஆனால், படத்தின் நீளம் காரணமாக நீக்கியுள்ளனர். ஆனால், இந்த படத்தில் யோகி பாபு காட்சி வராமல் போனதால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் யோகி பாபுவை நடிக்க வைப்பேன் என கூறியுள்ளார் இயக்குனர் அட்லீ.

அதே போல் மெர்சல், பிகில் மற்றும் தற்போது ஜவான் என தொடர்ந்து தன்னுடைய படங்களில் யோகி பாபுவை நடிக்க வைத்துள்ளார். இந்த தகவலை நேற்று நடந்த ஜவான் ப்ரோமோஷன் விழாவில் யோகி பாபு பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் போல் என்னால் அதை செய்யமுடியாது.. ஓப்பனாக கூறிய ஷாருக்கான்