இளையராஜாவை தொடர்ந்து அனிருத்தை தாக்கிய ஜேம்ஸ் வசந்தன்!
சினிமா துறையினர் பலரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இசைஞானி இளையராஜா பற்றியும் அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக இளையராஜா பொது மேடைகளில் பேசும் விதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்தை அவர் தாக்கி பேசி இருகிறார்.
ஒரே மாதிரி இசை..
அனிருத் தொடர்ந்து ராக், அதிரடி இசையாக மட்டுமே இருக்கிறது. தொடர்ந்து அதை கொண்டு எவ்வளவு நாள் ஓட்ட முடியும். அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு பிடிப்பதால் தான் அதை அவர் செய்கிறார் என எல்லோரும் சொன்னாலும் அனிருத் மெலோடி, குத்து பாட்டு என மற்ற விதமாகவும் பாடல்கள் கொடுக்க வேண்டும் என ஜேம்ஸ் வசந்தன் கூறி இருக்கிறார்.
பிரியாணி என்றாலும் ஒரு நாள் சாப்பிட்டால் நன்றாக இருக்கும், தினமும் சாப்பிட்டால் எப்படி இருக்கும்.. எனவும் கேட்டிருக்கிறார் அவர்.
அமீர் கானுக்கு இவ்வளவு பெரிய மகளா.. பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க