தமிழ்ப்படத்தில் ஜான்வி.. இந்த ஹீரோவுக்கு ஜோடியா? அப்பா போனி கபூர் கொடுத்த விளக்கம்

By Parthiban.A Feb 03, 2023 03:00 PM GMT
Report

ஜான்வி

ஜான்வி கபூர் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் அவரது ஹாட் இன்ஸ்டா புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவதால் இங்கும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவரது நடிப்பில் மிலி, குட் லக் ஜெரி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. கோலமாவு கோகிலா படத்தில் ரீமேக் தான் குட் லக் ஜெரி, அதே போல மிலி அன்பிற்கினியாள் என்ற படத்தின் ரீமேக் தான்.

தமிழ்ப்படத்தில் ஜான்வி.. இந்த ஹீரோவுக்கு ஜோடியா? அப்பா போனி கபூர் கொடுத்த விளக்கம் | Janhvi In Not Debuting In Tamil Boney Kapoor

தமிழில் நடிக்கிறாரா?

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜான்வி தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. பையா 2 படத்தில் ஜான்வியை ஹீரோயினாக நடிக்க இயக்குனர் லிங்குசாமி அணுகியிருக்கிறார் என்றும், அந்த படத்தில் விஷால் ஜோடியாக அவர் நடிக்கபோகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் போனி கபூர் இது பற்றி ட்விட்டரில் விளக்கம் அளித்து இருக்கிறார். "ஜான்வி தற்போது எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. தவறான வதந்தி பரப்பாதீர்கள்" என கூறி இருக்கிறார் அவர். 

முல்லையை தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. மகிழ்ச்சியில் குடும்பம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US