காதலில் உண்மையாக இல்லை.. தாய், தந்தையால் முதல் காதலை முறித்துக்கொண்டு ஜான்வி கபூர்..
ஜான்வி கபூர்
என வருத்தம் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்.
Dhadak எனும் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர் தற்போது பிஸியான இளம் நடிகைகளில் ஒருவராகி இருக்கிறார். மேலும், ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தின் மூலம் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் காதல் முறிவு
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் முறிவு குறித்து பேசியுள்ளார் ஜான்வி கபூர்.
இதில், "எனது முதல் காதல் சில நாட்களிலேயே முறிந்து போனது. முதிர்ச்சி இல்லாத வயது காரணமாக இருவருமே ஒரு வித குழப்பத்தில் இருந்தோம். அதனால் இருவருமே எங்களுடைய காதலில் நேர்மையாக இல்லை. தினம் தினம் பொய் சொல்லியே காதல் உறவை நீடித்துக்கொண்டு இருந்தோம்.
அந்த நேரத்தில் எனது பெற்றோர் படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி கடுமையாக எச்சரித்தனர். அவர்கள் சொன்னதை கேட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று புரிந்தது. அதனால் அந்த முதல் காதலை முறித்துக்கொண்டேன்" என ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நடிகை சுகன்யா- ஆனால் எப்படி தெரியுமா?