மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நடிகை சுகன்யா- ஆனால் எப்படி தெரியுமா?
நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் சுகன்யா.
தமிழில் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவரது திரைப்பயணம் வெற்றிகரமாக இருந்தது. கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
நடிகையாக மட்டும் இல்லாமல் பரதநாட்டிய கலைஞர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் என பல திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார்.
புதிய அவதாரம்
தற்போது சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால் இந்த முறை நாயகியாக இல்லை, பாடலாசிரியராக தானாம்.
மலையாள படம் ஒன்றில் தமிழ் காட்சிகள் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ் பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும் சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகளா இது, நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்களே- லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
