தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஜான்வி கபூர்
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மூலம் கதாநாயகியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
வளர்ந்து வரும் நடிகையான இவருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

முதல் படமே உச்ச நட்சத்திரமான ஜூனியர் என் டி ஆர் உடன் இணைந்து தேவரா நடித்துள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களிலும் ஜான்வி கபூரின் நடனம் பட்டையை கிளப்பியது.

 
    
    ப்ரீ புக்கிங்கிலேயே நல்ல வசூல் வேட்டை செய்யும் ஜுனியர் என்டிஆரின் தேவாரா? இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
அதுமட்டுமின்றி தேவரா படத்தின் ப்ரோமோஷன் தமிழ்நாட்டில் நடந்தபோது, தமிழில் அழாகாக பேசி அனைவரையும் கவர்ந்தார் நடிகை ஜான்வி கபூர். தனது அம்மாவிற்கு தமிழநாட்டில் கொடுத்த வரவேற்பை தனக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஜான்வி கபூர் சம்பளம்
இந்த நிலையில், தேவரா படத்தில் நடிப்பதற்காக நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜான்வி கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் வாங்கிய வரும் சம்பளத்தை, தனது முதல் தென்னிந்திய படத்திலேயே வாங்கியுள்ளார் ஜான்வி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    