நடிகை ஸ்ரீதேவி கைவிட்ட பழக்கத்தை அவரின் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து வருகிறாரா! என்ன தெரியுமா?

By Jeeva Jul 19, 2022 07:30 AM GMT
Report

ஸ்ரீதேவியின் பழக்கத்தை தொடரும் ஜான்வி

இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி, இவரின் மகள் ஜான்வி கபூரும் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் அடுத்து அவர் நடிப்பில் குட் லக் ஜெரி என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழில் நயந்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜான்வி “என் ஒவ்வொரு படத்தின் ஸ்க்ரிப்ட்டையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறேன். அதன் மூலம் எனக்கு நல்லது நடக்கிறது என்று நம்பிக்கை.

நடிகை ஸ்ரீதேவி கைவிட்ட பழக்கத்தை அவரின் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து வருகிறாரா! என்ன தெரியுமா? | Janvi Kapoor Continue Doing This After His Mother

என் அம்மா சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளுக்கு திருப்பதி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு ஏனோ அதை நிறுத்திவிட்டார்.

அம்மாவின் பிறந்தநாள் அன்று நான் திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று எனது உள்மனது சொன்னது. இதையடுத்து ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளுக்கு திருப்பதிக்கு செல்கிறேன். மேலும் புத்தாண்டுக்கும் திருப்பதி கோவிலுக்குதான் செல்வேன்” என பேசியுள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி கைவிட்ட பழக்கத்தை அவரின் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து வருகிறாரா! என்ன தெரியுமா? | Janvi Kapoor Continue Doing This After His Mother

பிபி ஜோடிகள் மேடையில் பாவ்னிக்கு லவ் புரொபோஸ் செய்த அமீர்- அழகிய புரொமோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US