விஜய் சினிமாவில் செய்யாததை செய்யப்போகும் அவரது மகன் ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், ஒரு குறும்படத்தை ஒன்றை இயக்கி இருந்தார்.
சமீபத்தில் இவருடைய முதல் படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

பான் இந்தியா?
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படம் பான் இந்தியா ஜானரில் ரிலீஸாகும் என்றும், இப்படம் 10 மொழிகளில் உருவாகிறதாம்.
மேலும் இதுபற்றிய அப்டேட்டையும் மினி டீசர் வடிவில் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று தெரியவில்லை.
உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதுவரை விஜய் கூட 10 மொழி படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவரது மகன் முதல் படத்திலேயே பான் இந்திய இயக்குனராக மாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டிவரும் விஜய்யின் லியோ- இதற்குள் இத்தனை கோடி வசூலாகிவிட்டதா?
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri