அட்லீ இயக்கிவரும் ஜவான் படம் இந்த தமிழ் படத்தின் காப்பியா? ஷாக்கிங் தகவல்
ஜவான்
அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இவர்களை தவிர்த்து முக்கியமான கேமியோ ரோலில் தீபிகா படுகோன் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு படத்தின் கதையின் தழுவல் என கூறி ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது. அட்லீயின் படம் என்றால் கண்டிப்பாக இப்படியொரு விமர்சனம் வருவது வழக்கமாகி விட்டது.
இந்த தமிழ் படத்தின் காப்பியா
ஆனால், ஜவான் படத்தின் கதைக்கும் பேரரசு படத்தின் கதைக்கும் சம்மதம் இல்லை என அதன்பின் தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போதும் அதே போன்ற சர்ச்சை எழுந்துள்ளது. அது என்னவென்றால், கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஒரு கைதியின் டைரி படத்தின் தழுவல் தான் ஜவான் திரைப்படம் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.

45 வருடமாக சினிமாவில் இருக்கும் ராதிகா.. ஏன் இன்னும் இதை கொடுக்கல! சரத்குமார் காட்டம்