ஜவான் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மட்டுமே இத்தனை கோடி விற்கப்பட்டதா! எவ்வளவு தெரியுமா
ஜவான்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இது அட்லீயின் இயக்கத்தில் உருவாகும் முதல் பாலிவுட் திரைப்படமாகும்.
இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைபெற்றுள்ளது.
சாட்டிலைட் ரைட்ஸ்
இப்படம் வெளிவருவதற்கு முன்பே ப்ரீ பிசினஸில் பல 100 கோடியை வசூல் செய்துவிட்டது என தகவல் ஏற்கனவே வெளிவந்தது. இந்த ப்ரீ பிசினஸில் முக்கியமான ஒன்று படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்.
இந்நிலையில், ஜவான் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் விருப்பனை ஆகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரிமையை ஜீ டிவி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?