இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை குறைக்க ஜெயம் ரவி செய்த விஷயம்.. வேறு யாரும் செய்ய நினைக்காதீர்கள்
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது அகிலன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
மேலும் இறைவன், JR 30 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இறைவன் மற்றும் JR 30 ஆகிய படங்களின் படப்பிடிப்பு அண்மையில் தான் துவங்கியது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோமாளி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
உடல் எடையை குறைத்தது எப்படி
இப்படத்தில் இடம்பெறும் பள்ளி பருவ கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இரண்டே வாரத்தில் எப்படி 18 கிலோ உடல் எடையை குறைத்தேன் என்ற ரகசியத்தை அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் 18 கிலோ உடல் எடையை குறைக்க இரண்டு வாரத்திற்கு கேரட் மற்றும் தக்காளியை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளாராம். மேலும், எப்போதாவது பிளாக் காஃபி குடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன்முலம் தான் இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை குறைத்தேன் என்றும் இதை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேறு யாரும் செய்ய வேண்டாம் என்றும் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் கார் புகுந்து விபத்து: 30 வயது நபர் உயிரிழப்பு News Lankasri