இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் தானா
அவர் வேறு யாருமில்லை, நடிகர் ஜெயம் ரவி தான். ஆம், முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தனது சிறு வயதில் நடித்த படத்தில் வரும் காட்சியின் புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விவாகரத்து
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது விவாகரத்து குறித்து அறிவித்திருந்தார். 15 வருட திருமண வாழ்க்கை முடிவு வருகிறது என அவர் அறிவித்திருந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து அவருடைய மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் சில சர்ச்சைகளும் இணையத்தில் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri