நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கிறாரே
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் இவருக்கு சிறந்த பாராட்டை பெற்று கொடுத்துள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக அகிலன், சைரன், இறைவன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஜெயம் ரவியின் இரண்டாவது மகன்
இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆரவ், தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பலரும் பார்த்திருக்க முடியாது. அண்மையில் தனது குடும்பத்துடன் ஜெயம் ரவி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்த பலரும், அச்சு அசல் ஜெயம் ரவி போலவே இருக்கிறாரே அயான் ரவி என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
ஜெயம் ரவி குடும்பம்
மோகன் ராஜா - ஜெயம் ரவி