நடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது.. நடிகைகளை ஓரங்கட்டிய ஆர்த்தியின் அசத்தல் போட்டோஷூட்
ஜெயம் ரவி
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்தது.
கலவையான விமர்சனம் இப்படத்திற்கு இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன், சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இரண்டுமே எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
ஆர்த்தி ரவி போட்டோஷூட்
ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வார். இந்நிலையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகைகளையே ஆர்த்தி ரவி ஓரங்கட்டிவிட்டாரே என்பது போல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் ஆர்த்தி ரவியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..




தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
