தோழிகளுக்காக சமீபத்தில் இப்படியொரு விஷயம் செய்தாரா மீரா- விஜய் ஆண்டனி மகள் குறித்து பிரபலம்
நடிகரின் மகள் மீரா
கடந்த இரு தினங்களாக விஜய் ஆண்டனி மகள் மீரா மறைவு குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது.
நன்றாக சந்தோஷமாக பள்ளி சென்று வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவர், அனைவரிடமும் அன்போடு பழகக்கூடிய மீரா தற்கொலை செய்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்று செப்டம்பர் 20 அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது, அந்த இறுதி நேரத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி அனுபவித்த சோகத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பேசி வருகிறார்கள்.'

மீரா செய்த விஷயம்
விஜய் ஆண்டனி மகள் மீரா உயிரிழப்பு குறித்து ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது, எனது பேத்தி மீராவை விட ஒரு வருஷம் பெரிய கிளாஸ் கடந்து ஆண்டு தான் முடித்தார். மீரா அவரது பள்ளியில் கேப்டனாக செயல்பட்டு வந்தார், மிகவும் போல்டான பெண்.
அந்த பொண்ணு கலை நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆடுவது, பாடுவது, இசை என அனைத்திலும் தனித்திறமையுடன் திகழ்ந்து வந்தா, ஆனால், இப்படியொரு முடிவை எடுப்பா என நினைக்கவில்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
எப்போதுமே விஜய் ஆண்டனி வீட்டில் இருந்து அவரது தோழிகளுக்கு எல்லாம் உணவு வரும். பாத்திமா அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். சமீபத்தில் கூட தனது தோழிகளை வீட்டுக்கு அழைத்து வந்து மீரா டின்னர் விருந்தும் எல்லாம் கொடுத்திருந்தார்.
எப்போதும் ஹேப்பியாக இருந்த அவள் இப்படியொரு முடிவு எடுத்தது சோகமாக உள்ளது என பேசியுள்ளார்.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri