ஜிகர்தண்டா 2 திரைப்படத்தில் ஹீரோவான பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் நடிகர் ! யார் தெரியுமா
ஜிகர்தண்டா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா.
மிகவும் மாறுப்பட்ட கதைகளத்தை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று இப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில் இணையத்தில் #8yearsofJigarthanda ஹாஷ்டேக் உடன் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

ஜிகர்தண்டா 2 ஹீரோ
இதற்கிடையே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் #8yearsofJigarthanda ஹாஷ்டேக் உடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். ஜிகர்தண்டா 2 திரைப்படம் உருவாக இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும் தற்போது இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அப்படி அந்த திரைப்படத்தில் நடிப்பது உறுதியானால் நிச்சயம் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை பார்த்துள்ளீர்களா