ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என தெரிகிறதா? மிகவும் பிரபலமான நடிகர்
வைரல் போட்டோ
திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் வைரலாவது வழக்கம் தான். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் தனது சிறு வயது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஜீவா
அவர் யார் என கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜீவா தான். ஆம், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மகனும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான ஜீவா தனது சிறு வயதில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது.
இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின், ஆசை ஆசையாய் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து வந்த ஜீவா கற்றது தமிழ், ராம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன் என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
மேலும் தற்போது தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜீவாவின் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான பிளாக் படத்தை இயக்கிய இயக்குநர் கே.ஜி. பாலசுப்பிரமணி தான் இப்படத்தை தற்போது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சருக்கே அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்ல; அதனால்தான் அப்போலோ - தமிழிசை தாக்கு! IBC Tamilnadu
