ரெட்ரோ பட நடிகர் ஜோஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கி படுகாயம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜோஜு ஜார்ஜ். அவர் தமிழில் ஜகமே தந்திரம் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு ரெட்ரோ, தக் லைஃப் போன்ற படங்களிலும் அவர் நடித்து இருந்தார்.
தற்போது அவர் மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்த நிலையில் அதன் ஷூட்டிங்கில் விபத்தில் சிக்கி இருக்கிறார்.
ஜீப் விபத்து.. நடிகர் படுகாயம்
மூணாறில் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட ஆறு பேர் ஜீப்பில் சென்ற போது, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜோஜு ஜார்ஜ் இப்படி விபத்தில் சிக்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.