ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து ஐரோப்பிய ஸ்டைலில் சண்டை காட்சிகளை படமாக்கி வந்தனர்.

படுகாயம்
இன்று மாலை சண்டை காட்சி படமாக்கி கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஜூன் என்டிஆர் தோளில் பெரிய காயம் ஏற்பட்டு இருக்கிறது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்னும் 6 முதல் 8 வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என நடிகரின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.