புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
ஜுராசிக் பார்க்
90ஸ் கிட்ஸ் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று ஜுராசிக் பார்க். 1993-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார்.

சாம் நீல்
இப்படத்தில் கதாநாயகனாக 'டாக்டர் ஆலன் கிராண்ட்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சாம் நீல். இவர் ஆங்கிலத்தில் வெளிவந்த Possession, Bicentennial Man, ஜுராசிக் பார்க் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும், ஜுராசிக் பார்க் படம் தான் இவரை பார்க்கும் போதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.

இந்த நிலையில், டாக்டர் ஆலன் கிராண்ட்-ஆகா நம் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் சாம் நீல் காலமானார். இவர் வயது 78. இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று அவர் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சாம் நீல் காலமானதை அறிந்து, ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.