ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா
2025ம் ஆண்டு ஹாலிவுட் படங்கள் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஜுராசிக் வேர்ல்ட் ரீ, F1 மற்றும் சூப்பர்மேன் என தொடர்ந்து வெளியாகியிருக்கும் ஹாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்புகின்றன.
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்
கடந்த ஜூலை 4ம் தேதி திரைக்கு வந்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படத்தை இயக்குநர் காரெத் எட்வர்ட்ஸ் இயக்க ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹெர்ஷாலா அலி மற்றும் ஜொனாதன் பைலி ஆகியோர் நடித்திருந்தனர்.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் வசூலில் முதல் நாளில் இருந்தே சாதனை படைத்து வரும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 6000 கோடி வசூல் செய்துள்ளது.
சூப்பர்மேன்
இதை தொடர்ந்து கடந்த வாரம் திரைக்கு வந்த சூப்பர்மேன் திரைப்படத்திற்கும் உலகளவில் நல்ல வசூல் வரவேற்பு கிடைத்துள்ளது.
இயக்குநர் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் டேவிட் காரென்ஸ்வேட், ரேச்சல் ப்ரோஸ்னாஹான், நிகோலஸ் ஹோல்ட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 2800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.