சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கிய ஜோதிகா.. அவரே கூறிய தகவல்
சூர்யா - ஜோதிகா
தமிழ் திரையுலகில் நட்சத்திரங்கள் ஜோடிகளாக வலம் வருகிறார்கள் சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்த நிலையில் 2007ஆம் ஆண்டு திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சூர்யா - ஜோதிகா இதுவரை பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்களும் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்த திரைப்படம் காக்க காக்க.
அதிக சம்பளம் வாங்கிய ஜோதிகா
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருந்தார். மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் குறித்தும் படத்தின் கதாநாயகி ஜோதிகா குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அது என்னவென்றால், காக்க காக்க படத்தில் நடிக்க சூர்யாவை விட நடிகை ஜோதிகா தான் அதிக சம்பளம் வாங்கினாராம். அதுவும் தன்னை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார் என சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
சூர்யா நடிப்பில் வருகிற 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
