வாய்ப்பை தவறவிட்ட ஜோதிகா.. விடாமல் பிடித்துக்கொண்ட 90ஸ் கனவு கன்னி
ஜோதிகா
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிப்பில் தற்போது காதல் தி கோர் எனும் மலையாள திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகை ஜோதிகா சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். இவருடைய ஜிம் ஒர்கவுட் வீடியோ கூட சமீபத்தில் வைரலானது. ஜோதிகா தன்னுடைய திரை பயணத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
வாய்ப்பை தரவிட்ட ஜோதிகா
அதே போல் சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டாள்.
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஹீரோயினாக சிம்ரன் நடிக்க ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். ஆனால், மணி ரத்னம் முதன் முதலில் இப்படத்தில் ஜோதிகாவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்து வைத்திருந்தாராம்.
ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் ஜோதிகாவால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் சிம்ரன் ஹீரோயினாக நடிக்க வந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான சன் டிவி சீரியல் முடிவடைகிறது.. வருத்தத்தில் ரசிகர்கள்