இரண்டு சூப்பர்ஹிட் விஜய் திரைப்படத்தை தவறவிட்ட ஜோதிகா.. எந்தெந்த படங்கள் தெரியுமா
விஜய் - ஜோதிகா
விஜய் - ஜோதிகா முதல் முறையாக குஷி படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். இப்படத்திற்கு பின் மீண்டும் திருமலை படத்தில் விஜய் - ஜோதிகா இணைந்து நடித்தார்கள்.
இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ஆனால், இந்த இரு திரைப்படங்கள் மட்டுமின்றி இன்னும் இரு திரைப்படங்களிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இருந்தது.
தவறிப்போன வாய்ப்பு
ஆம், விஜய் - சூர்யா இனைந்து நடித்து வெளிவந்த Friends திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் ஜோதிகா தான் நடிப்பதாக இருந்தார்.
ஆனால், அதன்பின் நடிகை ஜோதிகா படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இதன்பின் தான் தேவயானி இப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
Friends படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது ஜோதிகா தான்.
ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் ஜோதிகாவால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்படி இரு முறை விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றும் ஜோதிகாவுக்கு அந்த வாய்ப்பு தவறிப்போயுள்ளது.