தளபதி 67 படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.. விக்ரம் பாணியில் வெளிவரவிருக்கும் டீசர்
தளபதி 67 பூஜை
விஜய் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது. சென்னையில் உள்ள பிரபல ஏ.வி.எம் ஸ்டூடியோவில் தளபதி 67 படத்தின் பூஜை நடைபெறுகிறது.
பூஜையில் இருந்த எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுவரை எந்தெந்த நட்சத்திரங்கள் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.
அறிவிப்பு டீசர்
இப்படத்தின் போட்டோஷூட் நாளை 06.12.2022 நடைபெறுகிறது. அதன்பின் 07.12.2022 - 09.12.2022 வரை இப்படதின் அறிவிப்பு டீசரின் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
விக்ரம் பாணியில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்பதால் அதை காண விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.