சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலமான ஜோடிகள் சூர்யா - ஜோதிகா. இவ்விருவரும் தற்போது ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
இப்படத்தின் தயாரிப்பில் இதுவரை பொன்மகள் வந்தால், சூரரைப்போற்று, ஜெய் பீம், கார்கி என பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அடுத்ததாக 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகிற 12ஆம் தேதி வெளியாகிறது.
ஜோதிகா பெயரை நீக்கம்
எந்த ஒரு படத்திலும் தயாரிப்பு எனும் இடத்தில் சூர்யா-ஜோதிகா என்று தான் இணைந்து வரும். ஆனால், விருமன் திரைப்படத்தில் தயாரிப்பு எனும் இடத்தில் சூர்யா என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிகாவின் பெயர் இடம்பெறவில்லை.
விருமன் திரைப்படம் மசாலா கலந்த திரைப்படம் என்பதினால், இப்படத்தில் ஜோதிகாவின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் ஜோதிகாவிற்கும், சூர்யாவிற்கும் இடையே சண்டை என்று தவறான வதந்திகள் பரவி வருகிறது.

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
