பெரிய தொகைக்கு விலைபோன ஜோதிகா நடித்துள்ள ஹிந்தி படம்!! லேட்டஸ்ட் தகவல்
ஜோதிகா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். பின் எட்டு வருடங்கள் நடிக்காமலிருந்த அவர், 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் நடிக்க வந்தார்.
இப்படத்தை தொடர்ந்து ராட்சசி, மகளிர் மட்டும் , நாச்சியார்,செக்க செவந்த வானம், காதல் - தி கோர் எனப் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஓடிடி உரிமை
தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த ஜோதிகா, ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ் கானின் மனைவியாக நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சைத்தான் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை கோடிகள் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
