71 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஜோதிகா! யாருடன் தெரியுமா?
ஜோதிகா
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா.
முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவை ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அரம்பித்துள்ளார். அதன்படி கடைசியாக அவர் நடிப்பில் உடன்பிறப்பபே திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் அப்படத்தை Jeo Baby இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா