அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்
சூப்பர் ஸ்டார்
கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார், "விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" என்று கூறினார்.
அப்போதில் இருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்துவிட்டாரா என்று செய்தி சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
சில பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும், சில பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
நீ ஏன் பிச்சையெடுக்குற?
இந்நிலையில் பேட்டி ஒன்றி பங்கேற்ற தயாரிப்பாளர் கே ராஜன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், இன்னைக்கு உன் படம் நாளைக்கு இன்னொருத்தர் படம் வசூல் அதிகமா இருக்கும் அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா? இப்பொது வரை அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா? மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?
வாரிசு ஆடியோ லாஞ்சில் சரத்குமார், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அப்போதே விஜய் இல்லை என்று மேடையில் சொல்லி இருக்கலாம். அந்த பட்டத்திற்கு உரியவர் ரஜினிகாந்த் என்றும் சொல்லி இருந்தால் விஜய் புகழ் எங்கேயோ சென்று இருக்கும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின்பும் அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி!..விவாகரத்துக்கு காரணம் இது தானா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
