இதனால் தான் பிகில் படம் ஒடல.. விஜய்யை சீண்டிய பிரபல தயாரிப்பாளர்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்ரமாக இருந்து வருகிறார். அவரது சம்பளம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென அரசியலில் குதிப்பதாக அறிவித்து, கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை நேற்று தொடங்கி இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற முனைப்பில் விஜய் தற்போது தீவிரமாக அரசியலில் இறங்கி இருக்கிறார்.
அது ஒருபுறம் இருக்க விஜய் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் ஷூட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சீண்டிய தயாரிப்பாளர்
விஜய் நடித்த பிகில் படம் ஓடாததற்கு காரணம் என்ன என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசி இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஏன் ஒடுகிறது? கதை.. அது தான் காரணம். கதைக்காக நல்ல ஹீரோவை தேர்ந்தெடுக்க வேண்டும். கதை தான் ஹீரோ.'
'ஆனால் இங்கே ஹீரோவுக்காக கதை தேடுகிறார்கள். ஹிந்தியில் Chak De! India என்ற பெயரில் படம் எடுத்தார்கள், கதைக்காக நன்றாக ஒடியது. ஆனால் அதையே football கதையாக மாற்றி தமிழில் பிகில் படம் எடுத்தார்கள். அதற்கு ஆயிரம் கோடி செலவு. ஆனால் படம் அந்த அளவுக்கு இல்லை.'
'ஹீரோவுக்காக கதை எழுதுவதை விட்டுட்டு, கதைக்காக ஹீரோவும் தேடுங்க' என கே.ராஜன் பேசி இருக்கிறார்.

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
