காந்தா படத்தில் நடிக்க துல்கர், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
காந்தா
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் காந்தா.
இப்படத்தில் சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர்களின் நடிப்பு மிக அருமையாக இருந்தாலும், விமர்சன ரீதியாக படம் பின்னடைவை சந்தித்தது. மேலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலும் வரவில்லை.
சம்பளம் விவரம்
இந்த நிலையில், காந்தா படத்தில் நடிப்பதற்காக துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மான் - ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி
ராணா டகுபதி - ரூ. 6 கோடி முதல் ரூ. 8 கோடி
பாக்யஸ்ரீ போர்ஸ் - ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி
சமுத்திரக்கனி - ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி

சம்பளத்தை தாண்டி படத்தின் தயாரிப்பாளர்களான ராணா மற்றும் துல்கர் இருவருக்கும் லாபத்திலும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.