மமூட்டியின் காதல் தி கோர் படத்திற்கு தீடீர் எதிர்ப்பு!!
காதல் தி கோர்
கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் ஜியோ பேபி.
தற்போது இவர் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள காதல் தி கோர் திரைப்படம் 23 ம் தேதி வெளிவந்தது.
எதிர்ப்பு!!
காதல் தி கோர் படத்தில் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ள மம்மூட்டி கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவராக காட்டப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கத்தோலிக்க பாதிரியார்கள் அமைப்பினர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
அதில், காதல் தி கோர் திரைப்படம் கிறிஸ்துவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டு உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களை காட்சிப்படுத்த கிறிஸ்தவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
