Kgf 2, காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களின் இதுவரையிலான தமிழக வசூல் விவரம்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என 3 முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. படம் பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு முன் விஜய்யின் பீஸ்ட் மற்றும் Kgf 2 படம் வெளியாகி இருந்தது. இதில் பீஸ்ட் படம் சுத்தமாக ஓடாத நிலையில் Kgf 2 மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்கள் மட்டுமே தமிழகத்தில் அதிகம் திரையிடப்படுகின்றன.
தமிழக வசூல்
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் 9 நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான Kgf 2 திரைப்படம் ரூ. 105 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
மற்ற மொழி திரைப்படம் ஒன்று தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது என்றால் அது சாதனை தான் என Kgf 2 படத்தை பாராட்டி வருகிறார்கள்.
காவ்யாவிற்கு பதில் முல்லை வேடத்தில் இனி இவர்தான் நடிக்க போகிறாரா?- ஷாக்கில் ரசிகர்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
