பெற்றோர்களை இழந்து வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலம்- இப்படியொரு சோகமா?
காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, அதில் இளைஞர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகும் தொடர் தான் காற்றுக்கென்ன வேலி.
இந்த தொடர் கல்லூரி, காதல், குடும்பம், நட்பு, லட்சியம் என எல்லாம் கலந்து கலவையான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த வாரம் தொடரில் தேர்தல் நடக்கிறது, இதில் நாயகி வெண்ணிலாவா அல்லது வில்லி அபிநயா ஜெயிக்கப்போகிறாரா என்பது தான் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

நடிகை டயானா
இந்த தொடரில் நாயகியின் தோழியாக நடித்து வந்தவர் டயானா. இவர் ஒரு பேட்டியில், காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து என்னை விலக்கிவிட்டார்கள்.
காரணம் அந்த நேரத்தில் எனக்கு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் எந்த தேதி பிரச்சனையும் இல்லாமல் தான் பார்த்துக் கொண்டேன்.
எனினும் என்னை நீக்கிவிட்டார்கள், இப்போது படத்தில் நடித்து வருகிறேன்.
சிறுவயதிலேயே என்னுடைய அம்மா-அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள்.
சிறிய வயதில் இருந்தே தாழ்வு மனப்பான்மையுடன் குண்டாக இருக்கிறோம் என்று இருந்தேன். பருமனாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் அனைத்தையும் நானும் சந்தித்தேன்.
பலர் என்னிடம் உன்னை நானும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கிண்டலாக பேசுவார்கள் என எமோஷ்னலாக கூறியுள்ளார்.

கோலங்கள் 2 சீரியல் வரப்போகிறதா? தேவயானிக்கு பதில் யார்?- திருச்செல்வம் கொடுத்த சூப்பர் நியூஸ்