காற்றுக்கென்ன வேலி சீரியலில் அம்மாவாக நடித்த நடிகையா இது?- கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோ, செம வைரல்
காற்றுக்கென்ன வேலி
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வகையில் சில சீரியல்கள் உள்ளன, அதில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி. கல்லூரி, காதல், குடும்பம், பாசம், லட்சியம் என கதை எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது.
இப்போது தொடரில் சூர்யா வெற்றிகரமாக வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் மீனாட்சி அவர்கள் சொத்துக்களை ஏமாற்றி மாற்றி எழுதிக் கொண்டார்.
கல்லூரியிலும் சூர்யா, வெண்ணிலா நுழைய சதி செய்துவிட்டார் மீனாட்சி, அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
நடிகை ஜோதி ராய்
இந்த தொடரில் நாயகன் சூர்யாவின் அம்மாவாக சில மாதங்களுக்கு முன் ஜோதி ராய் என்ற நடிகை தான் நடித்து வந்தார், ஆனால் சில காரணங்களால் அவர் மாற்றப்பட்டு வேறொருவர் நடித்து வருகிறார்.
ஜோதி ராய் மாறியபோது ரசிகர்கள் பலருமே நீங்கள் இருங்கள் என புலம்பி இருந்தார்கள்.
தொடரில் புடவை அணிந்து அழகாக அம்மா வேடத்தில் நடித்தவர் தற்போது இன்ஸ்டாவில் படு கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சீரியலில் வந்தவரா இவர் என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.
மாமன்னன் பட வெற்றி கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய நடிகர் வடிவேலு- எத்தனை கோடி தெரியுமா?