அஜித் பட வில்லனுக்கு விரைவில் திருமணம்!.. யார் மணப்பெண் தெரியுமா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான வேதாளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கபிர் துஹான் சிங்.
இதையடுத்து இவர் தமிழில் றெக்க, விஷாலின், ஆக்ஷன், காஞ்சனா, அருவம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கபிர் துஹான் சிங் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்தில் நடித்திருப்பார்.
யார் மணப்பெண் தெரியுமா?
தற்போது 38 வயதான கபிர் துஹான் சிங், ஹரியானா மாநிலத்தில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வரும் சீமா சஹால் என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார்.
இந்த திருமணத்திற்கு சில பேரை மட்டுமே அழைத்து எளிமையான முறையில் நடத்த விரும்புவதாக கபிர் துஹான் சிங் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் பட வாய்ப்பை தட்டி பறித்த ஜோதிகா.. அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?