கடவுளே அஜித்தே முதன் முறையாக எங்கு யார் ஆரம்பித்து வைத்தது தெரியுமா, இதோ
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தல என அழைத்து வந்த நிலையில், அப்படி என்ன அழைக்க வேண்டாம் என கூறிவிட்டார்.
தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடவுளே அஜித்தே
கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் படுவைரலாகி வரும் விஷயம், கடவுளே அஜித்தே என்கிற கோஷம் தான். அதற்கு ஏற்றவாறு ஒரு ட்யூனை ரசிகர்கள் வைத்துள்ளனர். விடாமுயற்சி டீசர் வெளிவந்த நிலையில், கடவுளே அஜித்தே போன்ற சாயலில் தான் டீசரில் வந்த இசை இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் அனிருத்தின் இசை கச்சேரியில் கூட, கடவுளே அஜித்தே கோஷம் வந்தது. இந்த நிலையில், முதன் முதலில் இந்த கடவுளே அஜித்தே என்கிற விஷயம் எங்கு இருந்து துவங்கியது என தெரியவந்துள்ளது.
பரோட்டா கடை ஒன்றில் அஜித் ரசிகர்கள் அனைவரும் இணைந்து, மாஸ்டர் கொத்து பரோட்டோ போட, அந்த சத்தத்திற்கு ஏற்றபடி, அஜித்தே என கோஷமிட்டுள்ளனர். பரோட்டா கடையில் துவங்கிய இந்த கடவுளே அஜித்தே என்கிற ரசிகர்களின் கோஷம், இன்று உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
AK 'army' nu lolaaiku solrom nu nenachiya da.. 😎#VidaaMuyarchi pic.twitter.com/4rSf7YJjLp
— Trollywood 𝕏 (@TrollywoodX) November 30, 2024