முதல் நாள் காதலிக்க நேரமில்லை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ
காதலிக்க நேரமில்லை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் தனது பெயரை தற்போது ரவி மோகன் என மாற்றியுள்ளார். இனி தன்னை ரவி மோகன் அல்லது ரவி என அனைவரும் அழைக்க வேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், காதலிக்க நேரமில்லை திரைப்படம் கண்டிப்பாக மக்களிடையே கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வசூல்
நேற்று வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காதலிக்க நேரமில்லை திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
