கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த நடிகையா இவர்? நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே
கைதி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய திரை வாழ்க்கையில் அனைவராலும் ரசிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கைதி.

பேபி மோனிகா
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், மரியம் ஜார்ஜ், கண்ணா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் கார்த்தியின் மகளாக நடித்திருந்தவர் நடிகை பேபி மோனிகா.

இவர் இதற்கு முன் The Priest, பைரவா, ராட்சசன், எறும்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த நடிகையா இவர்? நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே என ஆச்சரியப்பட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
