கிரிஷ் அம்மா மரணம்.. அடைக்கலம் தர மறுத்த விஜயா!! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
விஜய் டிவியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை.
முத்து வீட்டிற்கு வந்த லட்சுமி
ரோகிணி போட்ட திட்டத்தின்படி லட்சுமி முத்து வீட்டிற்கு வந்துள்ளார். உங்களுடைய முகமே சரியில்லையே என கூறி லட்சுமியை உட்கார வைத்து பேசுகிறார்கள். ஏதாவது பணம் வாங்க வந்தீங்களா என அவமானப்படுத்தும் வகையில் கேட்கிறார் விஜயா.

வெளிநாட்டில் உள்ள தன் மகள் இறந்துவிட்டார் என லட்சுமி கூறவும் அனைவரும் உறைந்துபோய் விட்டனர். உடனடியாக லட்சுமி அருகில் சென்று அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார் விஜயா. இது கிரிஷ்க்கு தெரியுமா என முத்து கேட்க, தெரியும் என லட்சுமி கூறுகிறார்.

அடைக்கலம் தர மறுத்த விஜயா
மேலும், அம்மா இழந்துள்ள கிரிஷ், முத்து மற்றும் மீனாவிடம் இருக்க விரும்புவதாக லட்சுமி கூறுகிறார். அதெல்லாம் முடியாது, இந்த வீட்டில் கிரிஷ் தங்க விடமாட்டேன் என விஜயா சொல்ல, முத்து வாக்குவாதம் செய்கிறார். பின் முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் இணைந்து கிரிஷ் நம்ம வீட்டு பையன் அவன் இங்கேயே இருக்கட்டும் என முடிவு செய்கிறார்கள்.

உடனடியாக கிரிஷை அழைத்து வருகிறார் முத்து. ரோகிணி போட்ட திட்டம் இங்கு செயல்பட்டு விட்டது. ஆனால், மனோஜுக்கு கிரிஷ் இங்கு தங்குவதில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. இப்படியிருக்க கிரிஷுடன் எப்படி மனோஜுக்கு நெருக்கம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
