குழந்தை பெற்ற பிறகு கொஞ்சம் ஸ்டைலான உடையில் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்- செம வைரல்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகி சில காட்சிகள் நடித்தார். ஆனால் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட காஜல் அகர்வால் திருமணம், குழந்தை என இருக்கிறார்.

கடைசி படத்தில் சோகம்
காஜல் திருமணத்திற்கு பிறகு கடைசியாக நடித்து முடித்த திரைப்படம் தெலுங்கில் உருவான ஆச்சாரியா. சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இணைந்து நடித்த இப்படம் மோசமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றுள்ளது. அதோடு படத்தில் காஜல் அகர்வாலின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
மாடர்ன் போட்டோ
அண்மையில் தான் நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது, ஒருசில அவரது குழந்தையின் புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு காஜல் முதன்முறையாக புகைப்படம் பதிவு செய்துள்ளார்.
அதில் காஜல் கொஞ்சம் மாடனாக உடை அணிந்து போஸ் கொடுக்க ரசிகர்கள் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
அதோடு குழந்தை பெற்ற பிறகு இப்படி ஒரு போட்டோ எடுத்தாரா அல்லது ஏற்கெனவே ஏடுத்ததா எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
நஷ்டத்துடன் முடிவுக்கு வந்த விஜய்யின் பீஸ்ட் பட வசூல்- மொத்த வசூலே இவ்வளவு தான்