என் மகனுக்கு இந்த படத்தை தான் முதலில் காட்டுவேன்.. காஜல் அகர்வால் எடுத்த முடிவு
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கவுதம் என்பவரை திருமணம் செய்த காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார்.
தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொள்ளும் அழகிய புகைப்படங்களை கூட அவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் தற்போது பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் குறித்து பேசியுள்ளார்.
காஜல் எடுத்த முடிவு
'என் மகனுக்கு 8 வயது ஆகும் வரை எந்த ஒரு படத்தையும் காட்டப்போவதில்லை. 8 வயது ஆனபின் அவனுக்கு முதன் முதலில் நான் நடித்த துப்பாக்கி படத்தை தான் காட்டுவேன்' என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.
இந்த விஷயத்தை விஜய் ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளார்களே