ஏமாற்றிய இந்தியன் 2.. அடுத்து காஜல் அகர்வாலுக்கு கிடைத்த பிரம்மாண்ட படம்
நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகு ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து இருந்தார். அதிகம் ஒர்கவுட் செய்து உடல் எடையை குறைத்து தீவிர முயற்சி எடுத்து அந்த படத்தில் நடித்தார் அவர்.
ஆனால் அவரது காட்சிகள் அனைத்தும் இந்தியன் 3ல் வரும் என ஷங்கர் அறிவித்துவிட்டார். இந்தியன் 2 ரிலீஸ் ஆகி படுதோல்வி அடைந்த நிலையில் இந்தியன் 3ம் பாகம் வருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஷங்கர் மீது கோபத்தில் இருக்கும் காஜல் அகர்வால் இந்தியன் 2 ரிலீஸ் நேரத்தில் அந்த படம் பற்றி ஒரு இன்ஸ்டா பதிவு கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அடுத்து ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவர் நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் நடிக்க போகிறார்.
KGF புகழ் யாஷ் ராவணனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக மண்டோதரி ரோலில் காஜல் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.