கலகத் தலைவன் திரைவிமர்சனம்

Udhayanidhi Stalin Kalaga Thalaivan Magizh Thirumeni
By Kathick 2 வாரங்கள் முன்

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவனில் எப்படி மாறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார் என்று பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்து இருந்தனர். அதே போல் தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதும் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பினை வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை கலகத் தலைவன் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்

ட்ருபேடார் எனும் கார்ப்ரேட் நிறுவனம் அளவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் வாகனத்தை கண்டுபிடித்து அதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகிறது. ஆனால், இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமான காற்று மாசுவை உண்டாக்கும் என்று அதன்பின் தெரியவருகிறது.

கலகத் தலைவன் திரைவிமர்சனம் | Kalaga Thalaivan Review

இந்த விஷயம் வெளியே கசியக்கூடாது என்று ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் இந்த விஷயத்தை தெரிந்தவர்களிடம் கூறுகிறார். ஆனால், எப்படியோ இந்த விஷயம் ட்ருபேடாரின் எதிரி நிறுவனத்திடம் கசிந்து விடுகிறது. இதனால், ட்ருபேடார் அறிமுகம் செய்த இந்த வாகனத்தின் மேல் பல விமர்சனங்களும், ட்ருபேடார் நிறுவனத்தின் ஷேரும் பங்குச்சந்தையில் குறைய துவங்குகிறது.

ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ட்ருபேடார் நிறுவனத்திற்கு மேலும் இந்த அடி விழுகிறது. தன்னுடைய போட்டி நிறுவனத்திற்கு இந்த விஷயத்தை கசிய வைத்தது யார் என்று கண்டுபிடிக்க ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் நியமனம் செய்யப்படுகிறார் ஆரவ்.

கலகத் தலைவன் திரைவிமர்சனம் | Kalaga Thalaivan Review

அடிமட்டத்தில் இருந்து இதை கொடூரமான முறையில் விசாரித்து ஒவ்வொருவரிடமும் இருந்து பல உண்மைகளை வாங்கி வரும் ஆரவ், இறுதியில் இந்த அனைத்து கலகத்திற்கும் காரணம் யார், இந்த ரகசியங்களை வைத்து அந்த மர்ம நபர் என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? இதற்கும் கதாநாயகன் உதயநிதிக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் நடிப்பு ஓகே. கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பையும், மிரட்டலான ஆக்ஷனையும் அசால்டாக செய்துள்ளார். வில்லனாக வரும் ஆரவ் அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளார். ஒவ்வொருவரையும் தேடி தேடி கொடூரமாக வேட்டையாடும் ஆரவ்வின் நடிப்பு படத்திற்கு பலம்.

கதாநாயகியாக வரும் நிதி அகர்வால் எதற்காக படத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. முக்கிய வேடத்தில் தோன்றியுள்ள கலையரசனின் நடிப்பு ஓகே. மகிழ் திருமேனி எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு பாராட்டு. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அற்புதம். சிறு சிறு விஷயத்தை கூட குறிப்பிட்டு காட்டும் மகிழ் திருமேனியின் இயக்கத்திற்கு கைத்தட்டல்கள். இடைவேளை காட்சி மாஸ்.

கலகத் தலைவன் திரைவிமர்சனம் | Kalaga Thalaivan Review

ஆனாலும், தடம் எனும் மாபெரும் வெற்றிக்கு பின் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. எதிர்பார்ப்புக்கு நிகரான விறுவிறுப்பு சற்று குறைவு. திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரித்து இருக்கலாம். மகிழ் திருமேனியின் திரைக்கதை தானா இது என சந்தேகம் எழுகிறது.

ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம். அதே போல் இடைவேளை காட்சியின் வடிவமைப்பு சூப்பர். முக்கியமாக தில்ராஜின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி நிற்கிறது. அதற்கு தனி பாராட்டுக்கள். ஸ்ரீகாந்தின் எடிட்டிங் ஓகே. ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்க்கிறது.

பிளஸ் பாயிண்ட்

ஹீரோவாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் - வில்லனாக மிரட்டும் ஆரவ்

மகிழ் திருமேனி எடுத்துகொண்ட கதைக்களம்

இடைவேளை காட்சி

மைனஸ் பாயிண்ட்

எதிர்பார்ப்புக்கு நிகரான விறுவிறுப்பு சற்று குறைவு

தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனியின் திரைக்கதையா இது என்று கேள்வி கேட்க வைக்கிறது கலகத் தலைவன்

மொத்தத்தில் கலகத் தலைவன் ஆவரேஜ்..       

கலகத் தலைவன் திரைவிமர்சனம் | Kalaga Thalaivan Review


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US