லியோ படத்தில் விஜய்யுடன் சண்டை போடும் Hyena-வாக நடித்தது இவர் தான்.. யார் தெரியுமா, இதோ பாருங்க
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும் லியோ மாறியுள்ளது. கடந்த 5ம் தேதி லியோ படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது.
Hyena காட்சி
சில விமர்சனங்கள் இந்த டிரைலர் மீது இருந்தாலும், மற்ற விஷயங்களில் மிரட்டலாக இருந்தது. குறிப்பாக VFX தரமாக செய்திருந்தனர். அதற்கு உதாரணமே டிரைலர் இடம்பெற்ற அந்த Hyena தான். மிகவும் தத்ரூபமாக நம்மால் VFX மூலம் அந்த Hyenaவை பார்க்க முடிந்தது.
இவர் தான் ரியல் Hyena
இந்நிலையில், VFX மூலம் தத்ரூபமாக கொண்டுவரப்பட்ட Hyenaவாக நடித்தவரின் பெயர் கலைமணி. இவர் தான் VFX-க்கு உதவும் வகையில் Hyena-வாக கேமரா முன் நடித்துள்ளார்.
இதோ அவரின் புகைப்படம்..