புது படத்திற்காக அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன
நடிகர் அஜித்
நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தான் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் இப்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை, அடுத்தடுத்து படப்பிடிப்பு எப்போது எனவும் சரியாக தெரியவில்லை.
இப்படத்தை தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஜுன் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.

கண்டிஷன்
இப்படத்தை தொடர்ந்து அஜித்-சிவா கூட்டணி சன் பிக்சர்ஸ் தயாரிக்க உருவாக இருப்பதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அஜித்திற்கு போட்டுள்ள ஒரு முக்கிய கண்டிஷன் குறித்த தகவல்கள் வைரலாகியுள்ளது. அதாவது அஜித் கேட்ட சம்பளத்திற்கு சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அதேபோல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக அஜித் 2 மணிநேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கறாராக சொல்லிவிட்டார்களாம்.
அஜித் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவது என்பது லிஸ்டிலேயே இல்லை, என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri