சென்சார் செய்யப்பட்ட கல்கி.. படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா
கல்கி 2898 AD
பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கல்கி 2898 AD. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை 600 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டுள்ள கல்கி 2898 AD முதல் விமர்சனம் வெளிவந்து படத்தின் மீது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளது.
சென்சார்
இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கல்கி 2898 AD படம் U/A சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 56 வினாடிகள் என சென்சாரில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
