ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைக்கும் கல்கி 2898 AD.. இதுவரை எவ்வளவு தெரியுமா
கல்கி 2898 AD
பிரபாஸ் நடிப்பில் வருகிற 27ஆம் தேதி உலகளவில் வெளிவரவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தை தெலுங்கு இயக்குனரான நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பாட்னி, ஷோபனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் உலக நாயகன் கமல் ஹாசன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கல்கி 2898 AD திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் பல நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் குவிந்து வருகிறது.
ப்ரீ புக்கிங் வசூல்
ஆம், இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கல்கி 2898 AD திரைப்படம்.
இதில் வெளிநாடுகளில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது என்கின்றனர். மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 7 கோடி, கர்நாடகாவில் ரூ. 1.5 கோடி, தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற அனைத்து இடங்களிலும் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளாது என சொல்லப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
